Saturday, 16 November 2013

கடவுளுக்கு காய்ச்சல் அடிக்கிறது!....

தமிழ் புத்தாண்டு தினத்தில்  கோவில்
நீண்ட வரிசையில், காத்திருந்த போது
துளிர்த் சிந்தனைதைத் துளிகள்!..
நேற்று ஆள் அரவம் இல்லாத கோவிலில் இன்று கூட்டம்!
சாமியை காண இன்று மட்டும் எல்லோருக்கும் என்ன அவசரம்!
பாவத்தின் சுமை எல்லாருக்கும் நிரம்பி வழிகிறதோ!..
அல்லது சுண்டலுக்கும், பொங்கலுக்கும் சேர்ந்த கூட்டமா!
தன் வருங்கால வாழ்கை துணையை தேட வந்த கூட்டமா?
பக்தியும் முக்தியும் அழகான பெண்களின் மீது கொண்ட
பார்வையில் கரைகிறது!
நம் கடமையும் , பாவமும் உண்டியல் காசில் நிறைகிறது!
அச்சோ!...
ஒரு வேளை கடவுளுக்கு உடம்பு சரி இல்லையோ!
அதனால் தான் இத்தனை பேர் நலம் விசாரிக்க வருகிறார்களோ!
நடை திறந்ததும் முண்டி அடிக்கும் கூட்டம் நடை
மூடியதும் இருந்த சுவடில்லாமல் காணாமல் போகிறது!
தன் பாவங்களை புத்துணர்ச்சி உடன் தொடர...,
500 ரூபாய் special தரிசனம் பார்த்தவனக்கு  அதிக
பாவச் சலுகை போலும்!
கோவில் வாசல்களில் 6 மாசத்திற்கு பாவச்
சந்தா 1000 ரூபாய் என அறிவிப்பு பலகை            வைக்கும்  
நாள் ரொம்ப தூரம் இல்லை!                                                                                                                                        
ஒரு பாவத்திற்கு கோரும் மன்னிப்பு                                                                                                            இன்னொரு பாவத்தின்தொடக்கம் ஆகிறது!..
-இப்படிக்கு 130 கோடி இந்திய பாவிகளில் ஒருவன்!.... :)

No comments:

Post a Comment