Friday, 16 November 2012

I Love U Machi....!

என்ன தவம் யான் செய்தனை!.. எனை  நண்பனாக நீ ஈன்றடுபதர்க்கு!..
சின்ன சின்ன தலைகனங்கள், பெரிய பெரிய சண்டைகள் ,என முட்டாள் தன காதலின் இலக்கணங்கள் தகர்த்து எறியப்பட்ட  இலக்கியம்  நட்பு...!

உனக்காக நான் செலவிட்ட நிமிடங்களின் எண்ணிக்கை, உன் சோற்றை புடுங்கித்தின்ற போது, சிதறிய பருக்கைகளை விட குறைவு!..

எப்போதும் நீ எனக்கு வாங்கித்தந்த தேநீரை உன்னை கலாய்த்து குடித்த போது சிந்திய துளிகளை விட குறைவு,எனக்கு பிடித்த பெண்ணை நோட்டம்விட வற்புறுத்தி உன்னை அழைத்துச்சென்ற போது   நான் உனக்கு வாங்கி தந்த தேநீர் துளிகள் !...

3 மாதங்கள் படித்திருந்தாலும், தேர்வு முன்னிரவில், நெஞ்சில் அடித்துக்கொண்டு நீ படித்த வரிகள்,
நான்கு வருடம் நான் படித்ததை விட குறைவு!...

உன் மனதில் இருக்கும் பெருந்தன்மை உன் தேர்வு முடிவில் நன்றாகவே வெளிப்படும்!..
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை துறந்த நீ, மதிப்பெண்  மீது மட்டும் ஏன் இச்சை கொண்டிருக்கிறாய்!??

என் மாதாந்திர பேருந்து கட்டணம் முதல், பாட நகல் எடுக்கும் செலவு வரை வாரி இரைத்த நீ, ஏன் போயும்போயும் 1 மதிபென்காக சொட்டை தலை வாத்தியிடம் கை ஏந்துகிறாய்?....
பல நண்பர்களின் காதல் வேண்டுதல்களுக்காக, நீ பலி ஆடு ஆகி இருகிறாய்!...

உனக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறதென்று நண்பர்களிடம் சொல்லும் போது கேளிசித்திரம் ஆகி இருக்கிறாய்!....

என்றாலும், எப்போதும் நீ, நீயாய் இருக்கிறாய்!....

எப்போதும், எல்லாரையும்  சகித்து கொண்ட நீ,ஒரு நாள் என்னை அடித்த போது நான் சந்தோசமாக ஏற்று கொண்டேன்!...

உனக்குள் நீ புதைத்து இருக்கும் கோவைத்தை, குறைக்கும் வடிகாலாக நான் இருந்ததை எண்ணி..!

வாழ்கை என்னும் ரயிலில் மற்ற நண்பர்கள் அவரவர் நிறுத்தத்தில் இறங்க, கடைசி நிறுத்தம் கடந்தும் நாம் இறங்காதது  விந்தை!..

நீ காதலியை போல, தினம் பேச சொல்லி நச்சரிபதில்லை!.. டாப் up, ஊர் சுற்ற பெட்ரோல் என்று ஒரு நாளும்
 செலவு வைத்ததில்லை!...

ஆனால் இது அத்துனையும் நான் உனக்கு வைத்திருக்கிறேன்..!
சாதி மத பேதம் ஒழிய கலப்பு திருமணம் வேண்டாம், நட்பே போதுமானது நண்பனே!...

தீபாவளிகாக போட பட்ட தற்காலிக பட்டாசு கடை போல, என் வாழ்வில் வந்து சென்ற
நண்பர்கள் இடையில், என்றும் நிரந்தரமான ரேஷன் கடையாக நீ இருப்பாயாக!...
என்ன தவம் செய்தனை!.. நீ என் என் நட்பை eendreduppatharku!...


                                                I Love You Machi!.........













 

No comments:

Post a Comment